Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மாகாண விளையாட்டு விழா: பெண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் புதிய சாதனை

In
Updated: 11:12 GMT, May 28, 2017 | Published: 11:12 GMT, May 28, 2017 |
0 Comments
1897
This post was written by : Surenth

வடக்கு மாகாண விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று வடக்கு மாகாணத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.

நேற்று (சனிக்கிழமை) யாழ்.துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், மன்னார் மாவட்ட பெண்கள் அணி 54.3 செக்கன்களில் ஓடி முடித்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளது.

மற்றுமொரு ஆண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் மன்னார் மாவட்ட ஆண்கள் அணி தங்கப்பதக்கதை வென்றுள்ளது. இதன்படி, 44.13 செக்கன்களில் இலக்கை எட்டி வெற்றியை பதிவு செய்துள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டு விழாவின் 4×100 அஞ்சலோட்டப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகளில் மன்னார் மாவட்டம் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg