Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரற்ற காலநிலையால் ஏழு மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!

In இலங்கை
Updated: 12:54 GMT, May 28, 2017 | Published: 12:17 GMT, May 28, 2017 |
0 Comments
1645
This post was written by : Vithushagan

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் காணப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி  நிறுவனம் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அதிக மழை காரணமாக இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பாதைகளிலும் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 பிரதான பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அதேவேளை, காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் களனி, மாத்தறை மற்றும் களுத்துறை, பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பல பிரதான பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg