Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி

In சினிமா
Updated: 12:23 GMT, May 28, 2017 | Published: 12:23 GMT, May 28, 2017 |
0 Comments
1443
This post was written by : Shailu

‘நானும் ரௌடிதான்’ படத்தில் நயன்தாராவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருந்தனர். இப் படம் இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் நயன்தாராவுடன் மீண்டும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதாவது ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா நடித்து வருகின்றார். இப்படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்துள்ள நிலையில், நயன்தாரா பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதோடு, அவர் சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹிப் பொப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg