Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்களுக்கான வாகனக்கொள்வனவு இடைநிறுத்தம்: மஹிந்த அமரவீர

In இலங்கை
Published: 18:45 GMT, May 28, 2017 |
0 Comments
1199
This post was written by : Vithushagan
maqkintha-amaravera

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் நிறைவுறும் வரை அமைச்சர்களுக்கான புதிய வாகனக் கொள்வனவு இடைநிறுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் இடைநிறுத்தப்படும் எனவும் இதனை இடைநிறுத்தி மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை மீளவும் அமைத்துக் கொள்ள இருபது இலட்சம் ரூபா வரையில் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க உள்ளதாகவும்  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொகை ஒரு மில்லியன் வரையில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg