Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய ஏவுகணைச் சோதனை அழுத்தத்தை ஏற்படுத்தும்: தென் கொரியா

In உலகம்
Published: 04:27 GMT, May 29, 2017 |
0 Comments
1642
This post was written by : Sylviya

வடகொரியாவால் இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைச் சோதனையானது, கொள்கைகளை மாற்றும் பொருட்டு தென்கொரியாவின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை குறுந்தூரம் செல்லக்கூடிய வகையில் ஏவப்பட்டது எனவும் அதே நேரம் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்டது எனவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை சுமார் 120 கி.மீ உயரத்தில் பறந்ததாக குறித்த சோதனை தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே – இன் (Moon Jae-in) கடந்த 10ஆம் திகதி பொறுப்பேற்ற நாள் முதல், வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள மூன்றாவது வெற்றிகரமான சோதனையாக இது கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிரான தடைகளை விதித்துள்ளமை அதன் ஏவுகணைச் சோதனை நடவடிக்கைகளில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் மாறாக குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன  எனவும் ஜனாதிபதி மூன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg