Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோபா டெல் ரேய் கால்பந்து தொடர்: கிண்ணத்தை கைப்பற்றியது பார்சிலோனா

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:23 GMT, May 29, 2017 | Published: 04:31 GMT, May 29, 2017 |
0 Comments
1330
This post was written by : Shailu

கோபா டெல் ரேய் (Copa del Rey) கால்பந்து தொடர் இறுதிப் போட்டியில் அலவேஸ் அணியை வீழ்த்திய பார்சிலோனா அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதன்மூலம் 3-வது முறையாக கோபா டெல் ரேய் கிண்ணத்தை கைப்பற்றிய பெருமையை பார்சிலோனா அணி தனதாக்கியுள்ளது.

கோபா டெல் ரேய்  கால்பந்து இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) மெட்ரிட்டில் நடைபெற்றது. இதில் பார்சிலோனா மற்றும் அலவேஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியின் 30-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து 3-வது நிமிடத்தில் அலவேஸ் அணிக்கு ‘பிரிஹிக்’ வாய்ப்பு கிடைத்தது.

அதை பயன்படுத்தி தியோ ஹெர்னாண்டெஸ் (Theo Hernandez)  சிறப்பாக கோல் அடித்த நிலையில், இரு அணிகளும் 1-1 என் சமநிலையில் காணப்பட்டன.

45-வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த அபாரமான பந்தை நெய்மர் கோலாக்கியதை தொடர்ந்து, மீண்டும் மெஸ்சி வீசிய பந்தினூடாக அல்காசெர் (Alcacer)  அடுத்த கோலை கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து பார்சிலோனா 3-1 என முன்னிலைப் பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg