Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீரான ரயில் சேவையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 05:05 GMT, May 29, 2017 | Published: 05:05 GMT, May 29, 2017 |
0 Comments
1219
This post was written by : Varshini

சீரான ரயில் போக்குவரத்து சேவையை வழங்குமாறு கோரி, இந்தியாவின் மேற்கு சூரத் நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பயணிகள் ஒன்றுதிரண்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சூரத்திலிருந்து கிழக்கு மாநிலங்களான பீகார் மற்றும் ஜார்கண்ட், வடக்கு மாநிலங்களான உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களுக்குச் செல்வதற்கு மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதுமான ரயில்களை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு, சிரேஷ்ட ரயில்வே அதிகாரியிடம் எட்டு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை ரயில்வே போராட்டக்குழுவினர் கையளித்ததையடுத்து, அவற்றை செயற்படுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இவ்வாறான ஒரு போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை கொண்டுள்ள இந்தியாவில், 7000 பயணிகள் ரயில் உள்ளிட்ட 11,000 ரயில்கள் தினமும் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg