Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்றாவது முறையாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் பார்க் ஜியூன் ஹை!

In உலகம்
Updated: 05:34 GMT, May 29, 2017 | Published: 05:34 GMT, May 29, 2017 |
0 Comments
1568
This post was written by : Sylviya

பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக பதவியில் இருந்து விலக்கப்பட்ட ஜனாதிபதி எனும் அவப்பெயரை சம்பாதித்துக்கொண்ட தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை, இன்று (திங்கட்கிழமை) மூன்றாவது முறையாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பார்க் ஒரு குற்றவாளி என்றும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வரும் நிலையில், பார்க்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் சிலர் நீதிமன்ற வளாகத்தின் முன்றலில் கூடி ஆர்ப்பரித்துள்ளதுடன், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பார்க் குறித்த முதலாவது விசாரணை நடைபெற்ற போது, அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் எனவும் பல வணிக நிறுவனங்களிடம் இருந்து இலஞ்சம் பெற்றார் எனவும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

எனினும் சியோலின் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையின் பொருட்டு ஆஜர்படுத்தப்பட்டுள்ள பார்க், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பார்க் மற்றும் அவரது தோழி சோய் சூன் – சில் ஆகியோர் சம்சுங் உள்ளிட்ட பிரபல வணிக நிறுவனங்களுடன் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg