Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு பிலிப்பைன்ஸில் தீவிர தாக்குதல்

In உலகம்
Updated: 05:58 GMT, May 29, 2017 | Published: 05:58 GMT, May 29, 2017 |
0 Comments
2007
This post was written by : Sylviya

பிலிப்பைன்ஸின் மராவி பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் ஆறு நாட்களாக தாக்குதல் தொடரும் நிலையில், 50க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பொருட்டு பிலிப்பைன்ஸ் படையினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியதோடு ஹெலிகொப்டர் மற்றும் கவச வாகனங்களையும் பயன்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் பாதுகாப்பை ஏற்படுத்தும் பொருட்டு இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு அங்கிருந்த உள்ளூர் அரசாங்கம் அனைத்து பொறுப்புக்களையும் இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேறியுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், சுமார் 2,000 அப்பாவி பொதுமக்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg