Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா அமைதியை சோதிக்கின்றது: ஜப்பான் காட்டம்

In உலகம்
Updated: 11:24 GMT, May 29, 2017 | Published: 06:32 GMT, May 29, 2017 |
0 Comments
2458
This post was written by : Sylviya

ஏவுகணைச் சோதனை மற்றும் அணுவாயுதச் சோதனை ஆகியவற்றிற்கு சர்வதேசம் கடும் கண்டனம் தெரிவித்து வரும் போதும் அதனை சிறிதேனும் பொருட்படுத்தாத வடகொரியாவின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜப்பான் கடுமையாக எச்சரித்துள்ளது.

வடகொரியாவால் இன்று (திங்கட்கிழமை) காலையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது அணுவாயுதச் சோதனை தொடர்பில் உரையாற்றிய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, “அமைதியை சோதிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை நாம் இனிமேலும் அனுமதிக்க மாட்டோம். சர்வதேச சமூகம் வடகொரியாவுக்கு எத்தனை தடவைகள் எச்சரித்திருப்பினும், அவற்றை புறந்தள்ளி வடகொரியா இவ்வாறு நடந்துகொள்கின்றமை அனைவரது பொறுமையையும் சோதிக்கும் வகையில் உள்ளது. இதற்கு நாம் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம். இனிமேல் நாம் அமைதி காக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் குறித்த ஏவுகணை ஜப்பானின் கடற்பரப்பில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்த ஜப்பான், அதிஷ்டவசமாக எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த முட்டாள்தனமான போக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் விதிகளை முற்றாக மீறும் வகையில் உள்ளது எனவும் அபே தெரிவித்துள்ளார்.

குறித்த ஏவுகணையால் ஜப்பானின் கப்பல்கள் பல சேதமுற்றிருக்கக் கூடும் எனவும் ஆனால் மயிரிழையில் அது தடுக்கப்பட்டுள்ளது எனவும் அபே சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg