Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூரில் ஆபத்தான போஷாக்கு நிலைமையில் 1257 பேர் கண்டுபிடிப்பு!

In இலங்கை
Updated: 07:27 GMT, May 29, 2017 | Published: 06:47 GMT, May 29, 2017 |
0 Comments
1359
This post was written by : Ravivarman

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போஷாக்கு ஆபத்துக்குள்ளான நிலையில் 1257 பேர் இருப்பதாக, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள சுகாதார முன்னேற்றம் குறித்து இன்றையதினம் (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போஷாக்கு ஆபத்துக்குள்ளாகி உள்ளவர்களின் முன்னேற்ற அறிக்கை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாதாந்தம் சமர்ப்பிக்கப்படுகின்றது. அந்த வகையில் இம் மாதம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் போஷாக்கு ரீதியாக அபாயத்துக்குள்ளானவர்கள் அலுவலர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆபத்தான போஷாக்கு நிலைமையில் இருக்கும் சிறுவர்கள், பிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வளர்ந்த பெண்கள் ஆகியோரடங்கலாக மொத்தம் 946 பேரை இன்னமும் ஆபத்தான நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டியுள்ளது” என பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா மேலும் தெரிவித்தார்.

DSC04538

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg