Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டி: இந்தியா- பங்களாதேஷ் மோதல்

In கிாிக்கட்
Updated: 08:07 GMT, May 29, 2017 | Published: 07:15 GMT, May 29, 2017 |
0 Comments
1282
This post was written by : Shailu

சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கான 2-வது பயிற்சி போட்டியில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மோதவுள்ளன.

சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாட முடிவு செய்திருந்தது. அதன்படி நேற்று நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப்பயிற்சி போட்டியில் பெற்ற வெற்றியானது இந்திய வீரர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே உத்வேகத்துடன் இந்திய அணி 2-வது பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷை சந்திக்கவுள்ளது

சம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளும் இப் பிரிவில் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் இந்திய அணி தனது ஆரம்ப போட்டியில் எதிர்வரும் 4ஆம் திகதி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளதோடு, 8ஆம் திகதி இலங்கையுடனும், அதனை தொடர்ந்து 11ஆம் திகதி தென்னாபிரிக்காவுடனும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg