Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

IndyCar Series தொடரில் ஜப்பானியர் வெற்றி

In கிாிக்கட்
Updated: 09:00 GMT, May 29, 2017 | Published: 09:00 GMT, May 29, 2017 |
0 Comments
1405
This post was written by : Shailu

அமெரிக்காவில் நடைபெற்று வந்த இவ் வருடத்திற்கான IndyCar Series தொடரில், முதன்முறையாக ஜப்பானியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

IndyCar Series தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. பல முன்னணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற்றது.

INDY 500 ஓடுபாதையில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜப்பானிய வீரர் டக்கோமா சைட்டோ  (Takuma Sato)  வெற்றி பெற்றுள்ளார்.

இப்போட்டியின் போது, முன்னிலைப் பெற்றிருந்த ஸ்பெய்ன் வீரர் Alonso, வாகனத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெளியேற, ஜப்பானிய வீரர் டக்கோமா சைட்டோவின்  (Takuma Sato)  வெற்றி உறுதியானது.

2.5 மைஸ் தூரம் அதாவது 4.02 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த போட்டி ஆரம்பமாகி சிறிறு நேரத்திலேயே, JAY HOWARD வின் வாகனம் எல்லைச் சுவற்றில் மோதி தடம் மாறியது. இதன்போது, பின்னால் வந்த டிக்க்ஷனின் Dixon வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

தொடர்ந்து போட்டியில் முன்னிலைப் பெற்றிருந்த ஸ்பெய்ன் வீரர் Alonso வின் பந்தயக்கார், இயந்திரக் கோளாறு காரணமாக இடைநடுவில் செயல் இழக்க, அவர் தொடரிலிருந்து வெளியேறினார்.

இதனைச் சாதகமாகப் பயண்படுத்திக் கொண்ட ஜப்பானிய வீரர் (Takuma Sato), மிகச் சாதுரியமாக காரோடி வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg