Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மீட்பு!

In இலங்கை
Updated: 09:53 GMT, May 29, 2017 | Published: 09:29 GMT, May 29, 2017 |
0 Comments
1331
This post was written by : Ravivarman

சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மூன்று மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுக்கள், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 02.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டாரில் இருந்து வந்த இரு விமானங்களில் குறித்த சிகரெட்டுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

300 சிகரெட் பக்கற்றுக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளதுடன், கொழும்பைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இருவரே இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ள பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களை அழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg