Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் தாக்குதல்: சந்தேகத்தின் பேரில் இதுவரை 16பேர் கைது

In
Updated: 10:38 GMT, May 29, 2017 | Published: 10:38 GMT, May 29, 2017 |
0 Comments
1575
This post was written by : Sylviya

பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரை மொத்தம் 16பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்த கிரேட் மஞ்செஸ்டர் பொலிஸார், இன்று 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் மேற்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள ஷோரெம்மில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 64பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரி சல்மான் அபேடியும் குறித்த தாக்குதலின் போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த  சல்மான் அபேடியின் சகோதரி, சல்மான் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் அதனாலேயே இந்த தாக்குதலை முன்னெடுத்திருக்கக் கூடும் எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg