Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும்

In
Updated: 11:06 GMT, May 29, 2017 | Published: 11:02 GMT, May 29, 2017 |
0 Comments
1458
This post was written by : Sylviya
14 - 1

தீவிரவாதத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா உடன்படிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என சில பிரித்தானிய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பிரதமர் தெரேசா மேயிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தீவிரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ரீதியில் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்ததைத் தொடர்ந்தே சில பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரெக்சிற் விவகாரம் பிரித்தானியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது எனவும் பரவலான கருத்தொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய தரவு தளங்களை அணுகுதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கருவிகளை பிரித்தானிய பாதுகாப்பு பிரிவினர் அணுகுதல் என்பனவற்றிற்கு பிரெக்சிற் இடமளிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளமையே அதன் காரணமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது என்பது ஒன்றியத்துடன் பிரித்தானியா கொண்டிருந்த அனைத்து உறவுகள் தகர்க்கப்பட்டு புதிய உறவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே பொருளாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg