Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரேஷ்ட அமைச்சர்களை பதவி நீக்குமாறு கோரும் ராஜிதவின் புதல்வர்!

In இலங்கை
Updated: 11:25 GMT, May 29, 2017 | Published: 11:10 GMT, May 29, 2017 |
0 Comments
1648
This post was written by : Ravivarman

ஊழல் மற்றும் மோசடிகளை மறைப்பதற்கு துணை போகும் சாகல ரத்நாயக்க, விஜேதாச ராஜபக்ஷ இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும் என, அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான ராஜித சேனாரத்னவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இன்றையதினம் (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதாக வாக்களித்து இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

அதற்கான காரணம் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இருவரும் ஊழல், மோசடிகளில் தொடர்புடைய அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுகின்றமையாகும்.

எனவே அவர்கள் இருவரும் வகிக்கும் அமைச்சுப் பதவிகளிலிருந்து இருவரையும் பதவி நீக்க வேண்டும். இதனை நான் மட்டுமன்றி சிவில் சமூக அமைப்புகளும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன” என சதுர சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg