Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக அரசு கோமா நிலையில் உள்ளது: திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 11:53 GMT, May 29, 2017 | Published: 11:53 GMT, May 29, 2017 |
0 Comments
1417
This post was written by : Surenth

தமிழக அரசு தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும் தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து செயற்படுகின்றமையால் நிலையான ஆட்சியை அமைக்க அந்த கட்சியால் முடியவில்லை எனவே இந்த ஆட்சி ஒரு நிரந்தர மற்ற ஆட்சி எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.விற்கு ஆதரவு வழங்குமாறு அ.தி.மு.க.வை மத்திய அரசு அச்சுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது தமிழகத்தில் பலவீனமான ஆட்சி காணப்படுகின்றது எனவும், இந்த நிலையில், ஒற்றுமையாய் செயற்பட்டு அந்த ஆட்சியை கைப்பற்றி காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என சூளுரை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg