Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் தொடர் இங்கிலாந்து வசம்: தென்னாபிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

In விளையாட்டு
Updated: 05:19 GMT, May 30, 2017 | Published: 03:57 GMT, May 30, 2017 |
0 Comments
1776
This post was written by : Risha

இங்கிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்த தென்னாபிரிக்க அணி, 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்றிருந்த நிலையில், லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற 3ஆவதும் இறுதியுமான போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 31.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜொனி பெரிஸ்டவ் 51 ஓட்டங்களையும், ரொனால்ட் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும், டேவிட் விலி 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் மற்றும் கேஷவ் மஹராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 28.5 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்று மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக தென்னாபிரிக்க அணியின் ரபாடா தெரிவானர். அதேவேளை தொடரின் ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் மோர்கன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg