Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி உள்ளிட்டோருக்கு பிணை (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 08:15 GMT, May 30, 2017 | Published: 04:43 GMT, May 30, 2017 |
0 Comments
1389
This post was written by : Risha

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு குற்றப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் பா.ஜ.க. தலைவர்களுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்வானி உள்ளிட்டோர் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்படி மனு நிராகரிக்கப்பட்டு, 30ஆம் திகதிக்குள் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்படி தலைவர்கள் இன்று நேரில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிமன்றில் இன்று ஆஜராகிறார் அத்வானி!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி குற்றப் புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகவுள்ளார்.

மேற்படி வழக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்டோரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி குறித்த அனைவரும் இன்று ஆஜராகவுள்ளனர்.

அத்வானி உள்ளிட்டோர், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்களிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனு கடந்த 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி மனு நிராகரிக்கப்பட்டு, 30ஆம் திகதிக்குள் அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இக்குற்றச்சாட்டிலிருந்து 13 பேரையும் விடுவித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு துறையினர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg