Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி: நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை

In கிாிக்கட்
Updated: 05:41 GMT, May 30, 2017 | Published: 05:28 GMT, May 30, 2017 |
0 Comments
1489
This post was written by : Elakkiya

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சி. சம்பியன் கிண்ண பயிற்சிப் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. ஜி.எம்.டி. நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் பயிற்சிப் போட்டியே சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடருக்கான இறுதி பயிற்சிப் போட்டியாக அமைந்துள்ளது.

முன்னதாக அவுஸ்ரேலிய அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. அதேவேளை இந்திய அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணியும் தோல்வியடைந்தது.

எனவே இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பிலேயே இரு அணிகளும் களமிறங்கவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg