Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரி விதிப்பிற்கு எதிர்ப்பு: தமிழகத்தில் ஒரு இலட்சம் உணவகங்கள் பூட்டு

In இந்தியா
Updated: 07:31 GMT, May 30, 2017 | Published: 05:25 GMT, May 30, 2017 |
0 Comments
1309
This post was written by : Risha

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள் மீதான வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களிலும் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாதாரண உணவகங்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கு 2 சதவீத வரியும், ஏ.சி. வசதி உள்ள ஹோட்டல்களில் 2 சதவீத வற் வரியும் மற்றும் 6 சதவீத சேவை வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பை 12 மற்றும் 18 சதவீதங்களால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்பு போராட்டம் வெடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg