Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊக்கப்படுத்தல்கள் அவசியமில்லை: பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் சொஹைல்

In கிாிக்கட்
Updated: 06:00 GMT, May 30, 2017 | Published: 05:57 GMT, May 30, 2017 |
0 Comments
1432
This post was written by : Elakkiya

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அவரது அணியினருக்கு எதிரான எந்தவொரு மேலதிக ஊக்கப்படுத்தல்களும் பாகிஸ்தான் அணிக்கு தேவையில்லை என பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் ஹரிஸ் சொஹைல் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜூன் 4 ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நீண்டகாலமாக இருதரப்பு தொடர்கள் நடைபெறாத நிலையில் இந்த போட்டி கிரிக்கட் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இரு அணிகளின் வீரர்களும் இந்த போட்டியை ஒரு சவாலாகவே கருதுகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் சொஹைல், “நாம் சிறப்பாக தயாராகியுள்ளோம். இது இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய விளையாட்டாகும். நிச்சயமாக இது மிகப்பெரிய விளையாட்டு மாத்திரமே. அனைத்து கடுமையான போட்டிகளுக்காகவும் நாம் தயாராகின்றோம். பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பே எமது மிகப்பெரிய பலமாகும். அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg