Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரளாவை தாக்கியது தென்மேற்கு பருவமழை!

In இந்தியா
Updated: 05:58 GMT, May 30, 2017 | Published: 05:43 GMT, May 30, 2017 |
0 Comments
4041
This post was written by : Risha

கேரளா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு ஆகிய பகுதிகளை தென்மேற்கு பருவமழை இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் மற்றும் அதனை அண்மித்த பிராந்தியங்களிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும், கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் 5 தினங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாவதே வழக்கம். ஆனால் இம்முறை இரண்டு தினங்களுக்கு முன்னதாக பருவமழை தொடங்கியுள்ளது.

தென்மேற்கு பருவமழையினால் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை எனவும், தென் மாவட்டங்களில் மாத்திரம் சிறிது மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழகத்தில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg