Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உணவுப் பொருட்களை எடுத்து சென்ற படகு விபத்து: ஒருவரை காணவில்லை

In இலங்கை
Updated: 06:56 GMT, May 30, 2017 | Published: 06:11 GMT, May 30, 2017 |
0 Comments
1429
This post was written by : Surenth

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை தெற்கு – சேரபிட்டிய பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை தேரர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்கு எடுத்துச் சென்ற நிலையில், சிறிது தூரம் சென்றதும் படகு கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், படகில் பயணித்த தேரர் உள்ளிட்ட மூவர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவரை தேடும் பணியில், பொலிஸாரின் உயிர் காப்பு பிரிவின் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg