Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புழல் சிறையில் அதிகரிக்கும் தற்கொலை: மற்றுமொரு விசாரணை கைதி உயிரிழப்பு

In இந்தியா
Updated: 07:16 GMT, May 30, 2017 | Published: 06:55 GMT, May 30, 2017 |
0 Comments
1207
This post was written by : Risha

சென்னை புழல் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இரட்டை கொலை சம்பவமொன்றுடன் தொடர்புடைய செந்தில்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அந்தவகையில், கடந்த ஓராண்டுக்குள் புழல் சிறைக்குள் இடம்பெற்ற மூன்றாவது உயிரிழப்பு சம்பவமாக இது காணப்படுகிறது.

தந்தை, மகனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட செந்தில்குமார் கடந்த பெப்ரவரி மாதம் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்பட்ட நிலையில், அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று கழிவறையில் ஜன்னலின் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக விசாரணை கைதியின் சடலம், வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் மற்றும் ஆசிரியை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளையராஜா ஆகியோர் புழல் சிறையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg