Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிவாரண பொருட்களுடன் பாகிஸ்தான் கப்பல் இலங்கை வந்தது

In இலங்கை
Updated: 08:12 GMT, May 30, 2017 | Published: 07:38 GMT, May 30, 2017 |
0 Comments
1828
This post was written by : Surenth

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை தாங்கிய பாகிஸ்தான் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர், இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் இரண்டு கப்பல்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு அனுப்பியுள்ள கப்பலும் வந்துள்ளது.

இதேவேளை, சீன அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை ஏற்றிய மூன்று கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கையை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குமாறு சர்வதேசத்திடமும் அயல் நாடுகளிடமும் இலங்கை அரசு உதவி கோரியிருந்த நிலையில், பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg