Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சில்லறை விற்பனை நிலையத்தில் சல்மான் அபேடி: வெளியானது காணொளி

In
Updated: 07:56 GMT, May 30, 2017 | Published: 07:56 GMT, May 30, 2017 |
0 Comments
2023
This post was written by : Sylviya

பிரித்தானிய மஞ்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரி சல்மான் அபேடி, குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சில்லறை விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்யும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில் அபேடி கறுப்பு நிற மேலாடை அணிந்து விற்பனை நிலையத்தை வலம் வருவதோடு சில பொருட்களையும் எடுத்துச் செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று அபேடி நீல நிற பெட்டியொன்றுடன் வீதியில் நிற்கும் ஒளிப்படம் ஒன்றையும் பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்தனர்.

குறித்த பெட்டி தொடர்பில் தகவல் தெரிந்திருப்பின் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையன்று நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததோடு குறைந்தது 64 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg