Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்த அழிவுகளை பறைசாற்றி காட்சிப்படுத்தப்பட்டிருந்த நீர்த்தாங்கி விடுவிப்பு

In இலங்கை
Updated: 08:17 GMT, May 30, 2017 | Published: 08:17 GMT, May 30, 2017 |
0 Comments
2689
This post was written by : Varshini

கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறைசாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப்பட்டு வந்த, வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கி மற்றும் குறித்த நீர்தாங்கி அமைந்துள்ள பகுதி என்பன இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.

வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால், கரைச்சி பிரதேச செயலாளரிடம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நிறுவப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கி யுத்த காலத்தில் இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் குறித்த பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய யுத்த அழிவுகளுக்கான சாட்சியமாகவும் அதனைக் காட்சிப்படுத்தி வந்தனர்.

குறித்த நீர்த்தாங்கி வீழ்ந்திருப்பதை யுத்தத்தின் சான்றாக தென்னிலங்கை மக்களும் வெளிநாட்டவர்களும் பார்வையிட்டு வந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை விட்டும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg