Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பி.எஸ்

In இந்தியா
Updated: 10:39 GMT, May 30, 2017 | Published: 09:20 GMT, May 30, 2017 |
0 Comments
1384
This post was written by : Risha

இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பிற்காக கால்நடைகளை விற்க மத்திய அரசு விதித்த அதிரடி தடை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சசிகலா மற்றும் அ.தி.மு.க. அம்மா அணிக்கு எதிரான ஓ.பி.எஸ்., மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் தடையை எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஓ.பி.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரையான முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் கோயில்களில் ஆடுகளையும், மாடுகளையும் பலியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு அந்தத் தடை திரும்பப் பெறப்பட்டிருந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg