Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சுவாதி கொலை வழக்கு’ திரைப்படமாகிறது!

In சினிமா
Updated: 09:43 GMT, May 30, 2017 | Published: 09:35 GMT, May 30, 2017 |
0 Comments
2270
This post was written by : Risha

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் திரைப்படமாக இயக்கி இருக்கிறார்.

ஜெயஸ்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.கே.சுப்பையா இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ‘சுவாதி கொலை வழக்கு’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் சுவாதியாக ஆயிரா நடித்துள்ளார். ராம்குமார் பாத்திரத்திற்கு மனோ என்ற புதுமுகத்தை இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்படத்தில் கற்பனை காட்சிகள் எவையும் இடம்பெறவில்லை என்றும், நடைபெற்ற சம்பவங்கள் அவ்வாறே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தை எடுக்கும் ரமேஷ், விஜயகாந்தின் ‘உளவுத்துறை’, அருண் விஜயின் ‘ஜனனம்’ மற்றும் ‘வஜ்ரம்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg