Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோயிலில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!

In இலங்கை
Updated: 11:38 GMT, May 30, 2017 | Published: 11:38 GMT, May 30, 2017 |
0 Comments
1700
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு முருகன் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் (திங்கட்கிழமை) குறித்த ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாட்டின்போது அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணொருவரைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் நீர்கொழும்பு, சிலாபம், புளத்சிங்கள, கதுறுவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் சரியான முகவரிகள் குறித்த விபரங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

IMG_0205 IMG_0204

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg