Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக வரையறைகளை இந்தியா கவனத்திற்கொள்ளும்: ஜேர்மனியில் மோடி

In இந்தியா
Updated: 12:42 GMT, May 30, 2017 | Published: 12:42 GMT, May 30, 2017 |
0 Comments
1230
This post was written by : Sylviya

ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில் நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மோடி, “எமது எதிர்கால சந்ததியினருக்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது. உலக வரையறைகளை கருத்திற் கொண்டே இந்த உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், விமானநிலையங்கள் மற்றும் நீர்வழிப் பாதைகள் என்பன அமைக்கப்பட வேண்டும். சிறந்த பங்காளிப்பு செய்யும் நாடாக இந்தியா விளங்குவதால் மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பொருட்டு இந்தியா சிறந்த ஒத்துழைப்பை நல்கும்.

எனக்கும் என்னுடன் வந்த ஏனைய பிரதிநிதிகளுக்கும் சிறந்த வரவேற்பு வழங்கியமைக்காக அதிபர் அங்கேலா மேர்க்கலுக்கு எனது மனதார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய அதிபர் அங்கேலா மேர்க்கல், “பல்வேறுபட்ட துறைகளிலும் சிறந்து விளங்கும் இந்தியா போன்ற நாட்டுடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் ஜேர்மனியில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் இந்தியாவுடனான உறவுகள் மூலம் ட்ரான்ஸ் அட்லாண்டிக் உறவுகளுக்கு எதுவித பாதிப்பும் ஏறபடாது எனவும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg