Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ்மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் விசேட வேண்டுகோள்!

In இலங்கை
Updated: 12:57 GMT, May 30, 2017 | Published: 12:52 GMT, May 30, 2017 |
0 Comments
1370
This post was written by : Ravivarman

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபருக்கு இராஜாங்க அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“பொலிஸ் சேவையில் ஏராளமான முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி புரிகின்றனர். இப்தார், சஹர், தராவீஹ் தொழுகை மற்றும் ஏனைய வழமையான கடமைகளை அவர்கள் ஒழுங்கான முறையில் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

இதற்கமைய, புனித ரமழான் மாதத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தமது மத அனுஷ்டானங்களை தடையின்றி மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

விசேடமாக, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலை காரணமாக பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனால், சேவையில் உள்ள முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்” என அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg