Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் தொடரும் வெற்றிப்பயணம்: பங்களாதேஷ் படுதோல்வி

In கிாிக்கட்
Updated: 04:33 GMT, May 31, 2017 | Published: 04:28 GMT, May 31, 2017 |
0 Comments
1880
This post was written by : Anojkiyan

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் பயிற்சி போட்டியில் இந்திய அணி 240 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

ஓவல் மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 324 ஓட்டங்களை பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரூபல் ஹொசைன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனைதொடர்ந்து, 325 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 84 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அந்த அணி 240 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஹஸன் மிராஸ் 24 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய அணி எதிர்கொண்ட இரு பயிற்சி போட்டிகளிலுமே வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg