Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாட்டிறைச்சி தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை: வெங்கையா நாயுடு

In இந்தியா
Updated: 04:35 GMT, May 31, 2017 | Published: 04:31 GMT, May 31, 2017 |
0 Comments
1316
This post was written by : Shailu
Venkaiah Naidu,

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்காக கால்நடை சந்தையில் மாடுகளை விற்கவும், வாங்கவும் தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால், கால்நடைகளை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதோடு, எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றமும், மிருகவதைக்கு எதிரான நாடாளுமன்ற குழுவும் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் குறித்த விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இதில் சில மாநில அரசுகளும், வர்த்தக அமைப்புகளும் சில பிரச்சினைகளை முன்வைத்துள்ளதால் அவற்றை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg