Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் செயற்பட்டுவரும் தீவிரவாதிகளின் பெயர் பட்டியல் வெளியீடு

In இந்தியா
Updated: 06:00 GMT, May 31, 2017 | Published: 05:47 GMT, May 31, 2017 |
0 Comments
1379
This post was written by : Shailu

காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயற்பட்டுவரும் 12 தீவிரவாதிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டிரால் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதி சப்ஜர் பட் என்பவர் கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) இராணுவத்தினர் வெளியிட்ட பெயர்ப் பட்டியலில் ரியாஸ் நைகூ சுபைர் மற்றும் ஜாகிர் ரஷீத் பட் ஜாகிர் மூஸா ஆகியோர் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.

சப்ஜர் பட் கொல்லப்பட்டதால் அவரது இடத்துக்கு ரியாஸ் நைகூ தெரிவு செய்யப்படுவார் என்று கூறப்படுகிற நிலையிலேயே குறித்தப் பட்டியலில் இவர்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான் வானி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன்பின்னர் சப்ஜர் பட் அவரது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg