Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தத்தினால் பாதிப்புற்றோருக்கு துறைமுகங்கள் அமைச்சு துரித சேவை!

In இலங்கை
Updated: 08:24 GMT, May 31, 2017 | Published: 06:55 GMT, May 31, 2017 |
0 Comments
1321
This post was written by : Ravivarman

இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகிய மக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குத் தற்சமயம் கொழும்பு துறைமுகம்  விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நிவாரணங்களை வழங்குதல் கனிய எண்ணெய், அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பொருட்களை இறக்கும் நடவடிக்கைகளை மிக விரைவாக முன்னெடுத்து அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்கள் உரிய அதிகாரிகளிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல்களிலிருந்து பொருட்களை இறக்கும் நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் சீனா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இந்நாட்டிற்கு வருகை தரவுள்ள கப்பல்களிலிருந்து பொருட்களை துரிதகதியில் இறக்குவதற்கு தேவையான ஊழியர்களை 24 மணித்தியாலங்களும் சேவையில் அமர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg