Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் உணவகம் சீல் வைப்பு: உரிமையாளர் பிணையில் விடுதலை

In இலங்கை
Updated: 07:20 GMT, May 31, 2017 | Published: 07:20 GMT, May 31, 2017 |
0 Comments
2673
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு நகரில், உணவுகளை மலசல கூடத்திற்குள் வைத்துத் தயாரித்து விற்பனை செய்து வந்த உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) தகவல் ஒன்றை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகம் சுற்றி வளைக்கப்பட்ட போது அங்கு மனித நுகர்விற்கு உதவாத உணவுகள் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ். அமுதமாலன் தலைமையிலான குழுவினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டு அந்த உணவகத்தைப் பரிசோதித்ததுடன், அங்கிருந்த நுகர்விற்கு உதவாத உணவு வகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் உணவகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 09 பேருக்கும் மருத்துவச் சான்றிதழ்களைக் கொண்டிருக்கவில்லை எனவும், அவர்கள் அனைவரும் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டு, நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது உணவக உரிமையாளரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல அனுமதித்த நீதிவான்  எதிர்வரும் 15 ஆம் திகதியன்று வழக்கு விசாரணைகள் இடம்பெறும் என்றும் உத்தரவிட்டார்.

137

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg