Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உதவுமாறு வடக்கு மக்களுக்கு அழைப்பு

In இலங்கை
Updated: 07:59 GMT, May 31, 2017 | Published: 07:59 GMT, May 31, 2017 |
0 Comments
1643
This post was written by : Elakkiya

நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவுமாறு யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண வடக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

குறிப்பாக அரிசி, சீனி, பருப்பு, பால் மா மற்றும் குடிநீர் போத்தல்களை பொது மக்களிடம் தாம் எதிர்ப்பார்பதாகவும் நாளை (வியாழக்கிழமை) வரை உதவிப் பொருட்களை வழங்க விரும்புவோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை தமது உதவிப்பொருட்களை ஒப்படைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தெற்கு மக்களிற்கும் வடக்கு மக்களிற்கும் நல்லிணக்க உறவினை பரிமாறும் வகையில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நிவாரணப் பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் கிடைக்கப்பெறும் பொருட்களை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்றவகையில் பொதி செய்து வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

01

03.

02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg