Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதி தீ விபத்து: பொலிஸார் தீவிர விசாரணை

In கனடா
Updated: 09:48 GMT, May 31, 2017 | Published: 09:48 GMT, May 31, 2017 |
0 Comments
1198
This post was written by : Anojkiyan

ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷெப்பேர்ட் அவனியூவுக்க தெற்கே, யோங் வீதியில் அமைந்துள்ள ‘Eggsmart’ எனப்படும் உணவகத்திலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டது.

உணவகம் அமைந்துள்ள கட்டிடத்தின் கூரைப் பகுதியில் ஏற்பட்ட தீயினை தீயிணைப்பு படையினர் கடுமையான போராட்டதின் பின் கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த தீப்பரவலின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீப்பரவல் ஆரம்பமான போது கட்டிடத்தின் கூரைப் பகுதியில் மூவர் இருந்ததாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ள போதிலும், அந்த வேளையில் எதற்காக அவர்கள் அங்கே இருந்தார்கள் என்பது தெரியவரவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg