Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் பிரபாஸ்க்கு மிகவிரைவில் டும் டும் டும்

In சினிமா
Updated: 11:14 GMT, May 31, 2017 | Published: 11:14 GMT, May 31, 2017 |
0 Comments
1805
This post was written by : Anojkiyan

பாகுபலி-2 திரைப்படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகர் பிரபாஸ், மிகவிரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவலாக பேசப்பட்டுவருகின்றது. அதேவேளை பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் தொடர்பில் நடிகர் பிரபாஸ் எந்த கருத்தினையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை அனுஷ்காவை பிரபாஸ் காதலிப்பதாகவும் அவரையே மணம் முடிக்கவுள்ளதாகவும் வெளியான செய்திகளுக்கு மத்தியில், இவ்வாறனதொரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

‘பாகுபலி-2’ படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் ஒப்புக்கொள்ளாமல் இருந்த பிரபாஸ், தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg