Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக பூபதி நியமனம்

In இந்தியா
Updated: 11:37 GMT, May 31, 2017 | Published: 11:37 GMT, May 31, 2017 |
0 Comments
1312
This post was written by : Elakkiya

தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இதுவரை பணியாற்றிய ஜமாலுதீனின் பதவிக்காலம் இன்று புதன்கிழமையுடன் நிறைவடைகின்ற நிலையில் கூடுதல் செயலாளராக பணியாற்றிய பூபதி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அதன்படி சட்டப்பேரவைத் தலைவர் தனபால் முன்னிலையில் பேரவையின் புதிய செயலாளராக பூபதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜமாலுதீனுக்கு 2012 ஆம் ஆண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜமாலுதீனுக்கு பதவி நீடிப்பு வழங்கக் கூடாது என பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இன்று புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளர் பூபதி கடந்த 1983 ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலராக இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg