Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாட்டிறைச்சி விவகாரம்: அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு

In இந்தியா
Updated: 11:37 GMT, May 31, 2017 | Published: 11:21 GMT, May 31, 2017 |
0 Comments
1301
This post was written by : Shailu
Pinarayi Vijayan

மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக விவாதித்து முடிவெடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டப்போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாடு விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் விதத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ள பினராயி விஜயன், இதை கேரள அரசு ஏற்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மாடு விற்பனைக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்ட முதல்வர், மாடு விற்பனை கட்டுப்பாடு தொடர்பாக சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும் கால்நடைகளில் ஒருசில விலங்குகளை மட்டும் பிரித்து அறிக்கை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg