Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்

In இந்தியா
Updated: 11:56 GMT, May 31, 2017 | Published: 11:56 GMT, May 31, 2017 |
0 Comments
1390
This post was written by : Shailu

தியாகராயர் நகர் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கட்டடத்தில் விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், இவ்வளவு விதிமீறல்களுக்குப் பின்னர் குறித்த துணிக்கடை கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தியாகராயர் நகரிலுள்ள துணிக்கடை கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தீயால் பாதிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.

குறித்த துணிக்கடை கட்டடத்தில் எவ்வித விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை. கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன.

இவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன. சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுத்துள்ளன. எனவே அவற்றை இடித்து மீண்டும் விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும்.

இதன்மூலம் தீ விபத்துக்களின் போது ஏற்படும் சேதம் மற்றும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg