Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமல் விரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டு காணாமல் போகவில்லை!

In இலங்கை
Updated: 18:11 GMT, May 31, 2017 | Published: 18:11 GMT, May 31, 2017 |
0 Comments
1278
This post was written by : Vithushagan

சஷி  விரவன்சவின் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை என்பன நீதிமன்றப் பொறுப்பில் இருந்த நிலையில் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டதில் உண்மையில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

​போலியான ஆவணங்களை கையளித்து முறையற்ற வகையில் வௌிநாட்டு கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை தயாரித்தமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகநபரினால் தம்மீது குற்றமில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இந்திக குமார சேரமும் இன்று சாட்சியளித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது

குற்றவிசாரணை திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலான பொருட்களான கடவுச் சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன காணாமல் போயுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட போதும் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg