Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்தினபுரித் தொகுதி மக்களுடன் அமைச்சர் றிஷாட் விசேட கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 03:02 GMT, Jun 4, 2017 | Published: 03:02 GMT, Jun 4, 2017 |
0 Comments
1431
This post was written by : Ravivarman

இரத்தினபுரியில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இரத்தினபுரித் தொகுதி அனர்த்த நிவாரணத்துக்கான அமைப்பாளரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரத்தினபுரி ஜன்னத் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று (சனிக்கிழமை) மாலை பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார்.

இவ் விசேட கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்தலைவர், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களின் துன்பங்களில் தாங்களும் பங்கேற்று அன்பையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தி உதவுவதற்காகவே இந்த பிரதேசத்துக்கு தாங்கள் வந்ததாகவும் தங்களால் முடிந்த உதவிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் பாதிக்கப்பட்ட மக்களின் அனைத்துச் சேதவிபரங்களையும் அங்கு கோரியதுடன், மீள்கட்டமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் தெளிவு படுத்தினார்.

இந்த சந்திப்பின் போது மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஜெமீல், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் தலைவர் றிஸ்வான், உப்புக்கூட்டுத்தாபனத் தலைவர் அமீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஸாட் ரஹ்மத்துல்லாஹ் உட்பட மக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg