Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செயற்கைத் தீவுகளை சீனா இராணுவ மயமாக்குவதை ஏற்க முடியாது: அமெரிக்கா

In
Updated: 06:26 GMT, Jun 4, 2017 | Published: 05:56 GMT, Jun 4, 2017 |
0 Comments
1299
This post was written by : Anojkiyan

தென் சீனக்கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவுகளை சீனா இராணுவ மயமாக்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என அமெரிக்க இராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் வருடாந்த ஷங்கரி – லா உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகின்ற நிலைப்பாட்டுக்கு மாறாக, எந்தவொரு ஒரு தலைப்பட்சமான மற்றும் கட்டாய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தென் சீனக்கடல் விவகாரத்தில் இரு நாடுகளுக்குமிடையில் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகின்ற நிலையில், ஜேம்ஸ் மேட்டிஸின் இந்த பகிரங்க அறிவிப்பு சீனாவை சற்று சலனமடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg