Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய மக்களுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும்: ட்ரம்ப் ஆறுதல்

In
Updated: 08:26 GMT, Jun 4, 2017 | Published: 06:47 GMT, Jun 4, 2017 |
0 Comments
1497
icon_com
This post was written by : Anojkiyan

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “லண்டன் உட்பட பிரித்தானியாவில் என்ன நடந்தாலும் அதனை எதிர்கொள்ள அமெரிக்கா எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் பிரித்தானிய மக்களுக்கு, அமெரிக்கா பக்கபலமாக இருக்கும். எனவே யாரும் அச்சப்பட வேண்டாம் கடவுள் ஆசி உண்டாகட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றுமொரு டுவிட்டர் பதிவில், “புத்திசாலியாகவும், விழிப்பாகவும், கடினமாகவும் இருக்கவேண்டிய அவசியம் உள்ளது. நம்முடைய உரிமைகளை நீதிமன்றம் நம்மிடம் திருப்பியளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்கு, நமக்கு பயணத் தடை  அவசியமானது” என குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகளை அதிச்சியில் வீழ்த்தியுள்ள பிரித்தானிய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg