Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுற்றுச்சூழலை காப்பது அமெரிக்காவின் கடமையாகும்: சுவிட்ஸர்லாந்து

In ஐரோப்பா
Updated: 11:25 GMT, Jun 4, 2017 | Published: 10:15 GMT, Jun 4, 2017 |
0 Comments
1293
This post was written by : Anojkiyan
swis

சுற்றுச்சூழலை காப்பது அமெரிக்காவின் கடமையாகுமென சுவிட்ஸர்லாந்து ஜனாதிபதி டோரிஸ் லூதார்ட் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளதன் பின்னணியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை வருத்தமளிக்கிறது. சீனாவிற்கு அடுத்ததாக கார்பன் வாயுவை அதிகளவில் வெளியிடுவதில் அமெரிக்கா இரண்டாது இடத்தில் இருப்பதால் சுற்றுச்சூழலை காப்பது அமெரிக்காவின் கடமையாகும்.

எனினும், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உலக நாடுகளுடன் சுவிஸ் அரசு இணைந்து செயற்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg